பொதுவாக ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் பிறந்தது முதல் வாழ்வின் இறுதி வரை பணதிற்கு ஒருபோதும் கஷ்ட பட வேண்டிய நிலை ஏற்படாதாம்.
இவர்களின் ராசி பணத்தை தன்வசம் காந்தம் போல் ஈர்க்கும் தன்மையுடையது என குறிப்பிடப்படுகின்றது.
இப்படி வாழ்வில் பணப்பிரச்சினையை ஒருபோதும் சந்திக்காத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். இவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள்.
இவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். கடின உழைப்பு இன்றியே இவர்களுக்கு பணம் நிறைவாக கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் எப்போதும் தன்னை புதுமையாக காட்டிக்கொள்ள நினைப்பார்கள் இவர்களின் நடத்தையும் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும்.
இவர்கள் கருத்துக்கு மறுகருத்து சொல்ல யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். இவர்கள் கடின உழைப்பால் நேர்மையாக முன்னேற வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்கை முழுக்க பணப்பிரச்சினையை சந்திக்கவே மாட்டார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எல்லா விடயத்துக்கும் மதிப்பு கொடுப்பார்கள். கடின உழைப்பாளிகளான இவர்களுக்கு பணம் கிடைப்பதில் எப்போதும் சிக்கல்கள் ஏற்படுவதே இல்லை. நினைத்ததை நடத்தி முடித்த பின்னரே இவர்கள் மனம் அமைதியடையும்.