போரில் இரு கண்களையும்.. ஓர் கையும் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை படைத்த இருவர்

போரில் இரு கண்களையும். ஓர் கையும் இழந்து இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் B.A பட்டம் பெறும் முன்னாள் போராளிகளான அகமொழி மற்றும். சந்திரமதி ஆகிய இருவரையும் வாழ்த்துவோம்.

சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் இருவரும் எம் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

சஹ்ரானுடன் தொடர்புடைய ஐ.எஸ். அமைப்பின் கோயம்புத்தூர் தலைவருக்கு அடுத்த சிக்கல்


ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மொஹமட் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியமைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோயம்புத்தூர் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.எஸ். அமைப்பின் கோயம்புத்தூர் தலைவராக கருதப்படும் மொஹமட் அசாருதீன் மற்றும் அவரது உதவியாளர் ஷெயிக் ஹிதயதுல்லாஹ் என்ற சந்தேகநபர் இருவருக்கு எதிராகவே குற்றவியல் சதி மற்றும் பயங்கராத குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோவையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது மொஹமட் அசாருதீன் கைது செய்யப்பட்டார்.

இக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன்போது, மொஹமட் அசாரூதீன் என்ற சந்தேகநபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சமூக வலைத்தளத்தின் ஊடாக தொடர்புகளை பேணி வந்தமை உறுதி செய்யப்பட்டதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பு சார்பில் கேரளாவில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கருடனும் இவர் தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு வயது குழந்தைக்கு எமனாகிய மாறிய தென்னை மரம்


கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் சரிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குழந்தையை அவரது பாட்டி குளிப்பாட்டிக்கொண்டிருக்கையில், தென்னைமரம் அடியோடு சரிந்து குழந்தையின் மீது விழுந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

1 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழர்களுக்கு நல்ல முடிவு! சுமந்திரன் எம்.பி

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையைத் தீர்மானமாக நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுகளை ஆரம்பித்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவைக் கொண்டு வரும் என எதிர்பார்ப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புக்களைக் கையாண்டுள்ளோம்.

இதில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்தக் குழுவுக்கு இப்போது தலைமை தாங்குவது பிரிட்டன். ஆகவே, அவர்கள்தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் பிரிட்டன் தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமாகப் பேசினேன். வருகின்ற சில நாட்களில் மேலும் சிலருடன் பேச்சுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆகவே, எழுந்துள்ள புதிய சூழ்நிலை சம்பந்தமாக பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். இது மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசு தீர்மானங்களை எதிர்க்கவில்லை. சில ஆரோக்கியமான நகர்வுகளை அவர்கள் முன்னெடுத்தனர்.

பொறுப்புக் கூறல் விடயத்தைத் தவிர்த்துச் செயற்பட முடியாது. பொறுப்புக்கூறல் என்பது எல்லா அரசுகளுக்கும் இருக்கின்ற பொறுப்பாகும். அதனைத் தட்டிக் கழிக்கவே முடியாது.

இந்தப் புதிய அரசு வடக்கு மற்றும் கிழக்கில் எமது மக்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செய்தால் அதனை நாம் ஆதரிப்போம்.

அதற்காகப் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கண்ணை மூடிச் செயற்படுவதாக அர்த்தமில்லை.

இந்த விடயத்தில் எமது எதிர்ப்பையும் அழுத்தங்களையும் முழுமையாக நாம் பிரயோகிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் நியமனங்களை இரத்து செய்த ஜனாதிபதி


அரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் தீர்மானங்களை மீறி,

அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமித்த சில அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளதுடன் அந்த நியமனங்களை உடனடியாக இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை, இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை விமான நிறுவனம் ஆகிய சில அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ள ஜனாதிபதி, நிபுணத்துவ குழுவின் தீர்மானத்தை மீறி செயற்பட வேண்டாம் என அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரச நிறுவனங்களை முன்னேற்ற தகுதியான நபர்களை தெரிவு செய்ய விளம்பரம் வெளியிட்டுள்ளதாகவும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர்களில் தகுதியானவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் எவரையும் அரச நிறுவனங்களின் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டாம் என கூறியுள்ள ஜனாதிபதி, அப்படியான நபர்களை நியமிக்கும் போது அவர்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தை விட தேர்தலை இலக்காக கொண்டு செயற்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் தலைவராக நியமித்த புகழ்மிக்க நபரின் பெயர் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதால், அவரை நீக்கினால், அவருக்கு பெரும் அவமரியாதை ஏற்படும் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ள போதிலும் “ எதுவும் செய்ய முடியாது நான் கூறுவதை செய்யுங்கள்” என ஜனாதிபதி அந்த அமைச்சரிடம் கடுமையாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி - பிரதமருக்கிடையில் பிளவு வெடிக்கும் நிலை! செல்வத்தின் கண்டுபிடிப்பு


19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றுகூறி, அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். அதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

ஏனெனில் ஏற்கனவே மட்டுமீறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அதிகாரங்களற்ற பொம்மை பிரதமராக இருப்பதற்கு விரும்பமாட்டார்.

எனவே 19 ஐ ஒழிப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம், தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சர்ச்சை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டிருக்கின்றார். எனவே எதிரணியிலுள்ள கூட்டமைப்பும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு பெண்ணிடம் பல இலட்சங்களை சுருட்டிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்! வெளியான அதிர்ச்சிக் காணொலி

இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்களிற்கு குரல் கொடுக்க ஜெனீவா செல்கின்றேன் என கூறி புறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கம் வன்னி யுத்தத்தில் தனது கணவன் காணாமலாக்கப்பட்ட பெண் ஒருவரை ஏமாற்றி பல இலட்சங்களை திருடியுள்ளார்.

முள்ளியவளையைச் சேர்ந்த கணவனைத் தேடியலையும் பெண்ணை தான் ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்ளச்செல்லும் போது தன்னுடன் அழைத்துச்செல்வதாக சுவிட்சர்லாந்தில் வாழும் சகோதரியிடம் சுமார் 25 லட்சங்களை ஏமாற்றியுள்ளான்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கச் செல்கின்றோம் என செல்லும் இவர்கள் செய்யும் மோசடிகள் சிறந்த உதாரணம் ஆகும்.

குறித்த பெண்ணுக்காக 25 லட்சம் பணத்தை வழங்கியிருப்பதும் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் தனது கணவனை இழந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அகதிச் சகோதரியாகும்.

பணத்தை கொடுத்த பெண் குறித்த வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கத்தை தொடர்பு கொண்டு விபரம் கோரியபோது முன்னுக்கு பின் முரனான தகவல்களை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் குறித்த கணவன் காணாமலாக்கப்பட்ட பெண்ணிற்காக தான் 5000 பிராங்குகளை கொடுத்து கடிதத்தை பெற்று வீசாவிற்கு விண்ணப்பித்தபோதும், குறித்த பெண்ணின் பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் வீசா கிடைக்காமல் போனதாகவும், தடை பட்டியிலிருந்து பெயரை நீக்குவதற்கு அரசியல் பிரபலங்களால் மாத்திரமே முடியும் என்றும் கூறுகின்றார்.

அதாவது குறித்த வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜுவன் சண்முகலிங்கத்தின் அடுத்த இலக்கு சுவிட்சர்லாந்து தூதரக வீசாவிற்கான தடைப்பட்டியிலிலிருந்து பெயரை நீங்குவதற்காக அப் பெண்ணிடமிருந்து மேலதிக பணத்தினை பெற்றுக் கொள்வதாகும்.

பெறுமதி மிக்க ஜெனிவாவின் நிலை தமிழர்களால் கேள்விக்குள்ளாவது மிகப் பெரும் வேதனை எனக் கூறப்படுகிறது.

கூட்டமைப்பு உடைந்தது உறுதியானது! ஆயுதக் குழுக்கள் வெளியேற்றம்? அமைச்சர்களாகும் தமிழரசு?


இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முஸ்தீபுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஈடுபட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் - யுத்தத்தின் பின்னர்- ஏகபோக தலைமைத்துவமாக உருவெடுத்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி, கூட்டணி தர்மங்களை துளியும் கணக்கெடுக்காமல் ஏகபோகமாக செயற்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசு கட்சியுடன் கூட்டு வைத்துள்ள இறுதி கட்சிகளும் வெளியேறும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கான சில சுற்று பேச்சுக்கள் இந்த இரண்டு கட்சிகளிற்குமிடையில் நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுக்களில் கலந்து கொண்ட ரெலோ பிரமுகர் ஒருவரும் பேச்சு நடப்பதை உறுதி செய்தார்.

கடந்த ஆட்சியில் ரணில் தரப்புடன் இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திய தமிழ் அரசு கட்சி, அதற்கான சில வரப்பிரசாதங்களை பெற்றிருந்தது.

அது தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்களிற்கு மாத்திரமானது (சுமந்தரன் - மாவை சோனாதிராஜா - சம்பந்தன்).

அரசியல்தீர்வு உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த விவகாரங்களில் கூட்டமைப்பாக நெருக்கடியை சந்தித்திருந்த வேளையில், தனிப்பட்ட வரப்பிரசாங்களுடன் தமிழ் அரசுகட்சி தலைவர்கள் திருப்தியடைந்து விட்டனர் என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிய ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், திரைமறைவிலான இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், கோட்டா அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்கும் திரைமறைவு முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இதற்கு சாதகமான அப்பிராயத்தை உருவாக்க, புதிதாக அரசியலுக்கு ஈர்க்கப்படும் இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் பேசி வருவதுடன் அதற்கான ஆயத்தத்தத்தை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழ் அரசு கட்சியின் ஏகபோகம், தன்னிச்சை, பிழையான அரசியல் முடிவுகளின் எதிரொலியாக, அந்த கட்சியுடனான கூட்டணியை முறிக்க ரெலோ, புளொட் கட்சிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

இரண்டு கட்சிகளிலுமுள்ள உயர்மட்ட தலைவர்கள் மத்திரம் தொடர்புபட்ட இந்த பேச்சுக்களில் சில சுற்றுக்கள் முடிவடைந்துள்ளன.

இதேவேளை, இதன் அடுத்த கட்டமாக புதிய கூட்டணி உருவாக்கும் பேச்சுக்களும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிவற்றுடன் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்கும் முதற்கட்ட பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

அடுத்த சில தினங்களில் இந்த நான்கு தரப்பின் முக்கிய தலைவர்களும் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதையும் தமிழ்பக்கம் அறிந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியிருந்தது.

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறின.

இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு கட்சிகளும் வெளியேறும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் இலங்கை தமிழ் அரசு கட்சி கையெழுத்திட்டிருக்கவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன அதில் கையெழுத்திட்டன. இந்த கட்சிகள் இப்பொழுது மீண்டும் கூட்டணி வைக்கும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதால், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரையே பயன்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடவுச்சீட்டு விநியோகம்! தமிழ் பெண்களுக்கு வரும் புதிய நடைமுறை


புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் சர்வதேச நியமங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருத்தல் அவசியம். ICAO எனப்படும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பானது புதிய கடவுச்சீட்டுக்கான படம் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை எல்லா நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. அதன்படி கடவுச்சீட்டிலுள்ள புகைப்படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இருக்க முடியாது. ஆகையால் நாம் நெற்றியில் பொட்டு வைப்பதை தவிர்க்கச் சொல்கிறோம்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தமிழ் பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதாவது பொட்டு உள்ள படத்தை கடவுச்சீட்டில் கொண்டிருக்கும் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் பொட்டு வைக்காமல் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

இந்த நெருக்கடியான நிலையால் சில நாடுகளின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிறுத்தி வைத்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமன்றி குறித்த நாடுகளுக்கான விசாக்களை பெறுவதும் இவர்களுக்கு சவாலாகவே இருக்கின்றன.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் விசாக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே தமிழ் பெண்களின் நன்மை கருதி இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கிவைப்பு!

கடல் தொழில்லில் ஈடுபட்டிருந்த வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இழப்பீட்டு தொகையாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கிவைத்தார்.

இன்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் அமைச்சரின் தலைமையில் பிரதேசத்தின் கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் கடல் சார் உயிரினங்களை வளர்ப்பது தொடர்பான ஆராய்வு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது குறித்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த ஜீன் மாதம் 29 ஆம் திகதியன்று கடும் மழைக்கும் மத்தியில் கடற்றொழிலுக்கு சென்றிருந்தபோது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி முருகானந்தம் ஆனந்தராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தை பலியானார்.

இந்நிலையில் குறித்த குடும்பத்தின் எதிர்காலம் கருதி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறித்த இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது 10 இலட்சம் ரூபா வுக்கான இழப்பீட்டு காசோலையை இறந்தவரின் மனைவியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

நுகர்வோர் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1900 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 237 வர்த்தக நிலையங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் ஒரு குறிப்பிட்ட நிர்ணய எடை இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றிவளைப்புக்கள், டிசம்பர் 15 ஆம் திகதி வரை நடைமுறைபப்படுத்தப்படவுள்ளன.

நீங்கள் இதில் எந்த ராசியில் பிறந்தவர்? மிகவும் கோழையாக இருப்பீர்களாம்!


ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிக்காரர்களுக்கு மோதல்களை தவிர்க்க அமைதியாக இருப்பது, முடிவெடுப்பதில் சிக்கல், மோசமான முடிவுகள் போன்றவற்றை நினைத்து பயப்படுபவர்களாக இருப்பார்கள்.

இருப்பினும் சிலர் விருப்பப்படி வாழ முடியாத கோழையாக சில விஷயங்களில் இருப்பார்கள்.

அந்தவகையில் 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்கள் கோழையாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.


மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே நல்ல முடிவுகளை விரைவாக எடுக்கும் திறன் இருக்காது. சிலசமயங்களில் ஒருவர் முடிவெடுக்க பயப்படுவதற்குப் பின்னால் இருக்கும் காரணம் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்து பயப்படுவதுதான்.

அவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள், மேலும் தன்னுடைய உள்ளுணர்வைக் காட்டிலும் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.

மிதுனம் இரட்டையர்களின் அடையாளம் என்பதால் அவர்கள் இரு மனம் கொண்டவர்கள், ஆனால் அந்த இரு மனமும் ஒரு முடிவை ஏற்றுக்கொள்வதில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் முதுகெலும்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் அதனை விரும்புவதில்லை என்பது மட்டும் முக்கியமல்ல, ஒரு எதிர்மறையான கமெண்டில் இருந்து வெளிவர இவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும்.

துலாம் ராசிக்காரர்கள் ஒருபோதும் அவர்கள் மீதான விமர்சனங்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அப்படி அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் நடிக்கிறார்கள் என்று அர்த்தம். விமர்சனம், எவ்வளவு ஆக்கபூர்வமானதாக இருந்தாலும், துலாம் அதனை திறனைக் கொண்டுள்ளது.

காலம் கடக்கும்போது பெரும்பாலான மக்கள் விமர்சனத்தை மறந்திருப்பார்கள் என்றாலும், துலாம் அதை நினைவில் வைத்திருப்பார், அதைப் பற்றிய சிந்தனை மட்டுமே அவர்களை மீண்டும் காயப்படுத்தும்.

மீனம்
மிகவும் நல்லவர்களாக இருப்பவர்கள் நிச்சயம் தங்கள் முதுகெலும்பை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதற்கு சிறந்த உதாரணம் மீன ராசிதான். தன்னை காயப்படுத்தியவர்களிடம் கூட இவர்கள் மென்மையாக நடந்து கொள்வார்கள், அனைவரையும் எளிதில் மன்னிப்பது, இவர்களை மீண்டும் மீண்டும் மற்றவர்களுக்கு காயப்படுத்தும் தைரியத்தைக் கொடுக்கும்.

இவர்கள் நிலைமையைச் சரி செய்ய நேரம் எடுத்துக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு அநீதி இழைத்த நபரை அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்காமல் மீண்டும் தங்கள் வாழ்க்கையில் அனுமதித்தால், அவர்கள் வேண்டுமென்றே ஆபத்தான நடத்தை முறையை மீண்டும் செய்கிறார்கள்.

தனுசு
மற்றவர்களாலும் அவர்களின் பிரச்னைகளாலும் இவர்கள் எளிதில் திசைதிருப்பப்படலாம். அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அனைவரையும் அவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். சிலசமயம் இவர்கள் தங்களுக்கும், தங்களின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்களால் முரண்பாடாக இருக்க முடியாது அதற்கு காரணம் இவர்களை சுற்றியிருக்கும் கவனச் சிதறல்கள்தான்.

இவர்களின் முரண்பாடுகள்தான் இவர்களின் இலட்சியத்தை அடைய வைக்கும். தனுசு மக்கள் மீது சரியான நம்பிக்கையைச் செலுத்தும் நேரங்கள் உள்ளன, அவர்கள் இறுதியில் சரியானதைச் செய்வார்கள், ஆனால் அதற்கு முன் அவர்கள் நிறைய காயம் பட்டிருப்பார்கள்.

கடகம்
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் கடக ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் அதிகமிருக்கும்.

இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு தன்னுடைய சிறந்த தோற்றத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள். மேலும் மற்றவர்களுக்கு எப்பொழுதும் தங்கள் மீது நல்ல அபிப்பிராயம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

ஒருவரைப் பற்றி இவர்களுக்கு சரியான அபிப்பிராயம் இல்லை என்றால் இவர்கள் அதனை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டார்கள்.

அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், மற்றவர்களுக்கு தங்களை பிடிக்கவில்லை என்று இவர்கள் நினைத்தால் அதனை நினைத்து கவலைப்படுவார்கள்.

தினமும் கயிற்றில் தொங்கி கொண்டு பயணிக்கும் மாணவர்கள் : இலங்கையில் தொடரும் அ வலம்!!


சிங்ஹராஜ வனத்திற்கு அருகாமையிலுள்ள லங்காகம என்ற பகுதியில் மக்கள் பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லாமையினால் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை கயிறு ஒன்றை பிடித்து தொங்கி கொண்டு பயணிக்கும் அ வலநிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நெடுஞ்சாலைகள், அதிவேக பாதைகள் என அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கையில் இப்படியான சூழல் முழுதாக மாற்றம் அடைய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், தற்போது மழை காலம் என்பதால் லங்காகம பகுதியில் உள்ள மக்கள் பாரிய ச வால்களை எதிர் கொண்டு வருகின்றனர். உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.