ரிஷப ராசியில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம் காணப்படுவதால் அது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு அதிஸ்டத்தை கொடுக்கிறது.
மே 1 அன்று வியாழன் ரிஷப ராசிக்கு நகர்ந்தார். தொடர்ந்து மே 14-ல் சூரியன் அதே ராசிக்குள் நுழைந்தார். தற்போது வரும் மே 19ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்குள் நுழைகிறார்.
இதனால் இந்த 3-ம் ஒன்று சேர்வதால் அன்று திரிகிரஹி யோகம் உருவாகிறது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு யோகம் கிட்ட போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
உங்கள் ஆளுமையும், செல்வாக்கும் பெருமைப்படுத்தும் அளவில் அதிகமாகும். உங்களிடம் புதிய வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை பெறுவார்கள். திருமண வாழ்க்கையும், காதல் வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
உங்களுக்கு பல ஆண்டுகளாக இருந்த வேலைகள் இந்த யோகத்தின் மூலம் முடிவிற்கு வரும். ஒரு விஷயத்தை முதலீடு செய்தால் அது வெற்றியில் முடியும். நிதி ஆதாயம் உண்டாகும். நீங்கள் விரும்பிய பொருளை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் செழிப்பையும், கௌரவத்தையும் பெறுவார்கள். பல நாட்கள் கழித்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பார்கள்.
நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயம் வீடு தேடி வரும். காதல் மனைவியை கைபிடிப்பீர்கள். தொழிலில் முன்பை விட இன்னும் சிறப்பான லாபம் வரும்.