கருப்பு கயிற்றால் அதிர்ஷ்டசாலியாகும் ராசிக்காரர்கள்- ஜோதிட விளக்கம்

பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கால் அல்லது கைகளில் கருப்பு நிற கயிறு கட்டுவதை வழக்கமாக்கி வருகின்றனர்.

சிலர் ஜோதிடர்களின் கூற்றின் படியும் இன்னும் சிலர் அழகிற்காகவும் இதனை அணிந்து வருகின்றனர்.

ஆனால் இந்த கருப்பு கயிற்றை குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அணிவதால் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பதிவுகள் கூறுகின்றன.

மேலும் கருப்பு நிறம் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவான நிறங்களில் ஒன்று. பொது நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள், துக்கமான இடங்கள் என அனைத்து இடங்களிலும் அழகு சேர்க்கும் நிறமாகவும் பார்க்கப்படுகின்றது.

இப்படியான சிறப்பு கொண்ட கருப்பு நிறத்தில் உள்ள கயிறுகளை கை, கால்களில் கட்டுவதினால் என்னென்ன பயன்கள் என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

கை மற்றும் கால்களில் அணியும் கருப்பு கயிற்றிற்கு சில விதிமுறைகள் உள்ளன. இவற்றை மீறும் பொழுது வாழ்வில் ஏகப்பட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கருப்பு கயிற்றில் மறைந்திருக்கும் ரகசியம்

மகரம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கருப்பு கயிறு அணிவது நல்லது. அத்துடன் கருப்பு நிற ஆடைகளையும் இவர்கள் எந்தவிதமான தயக்கங்களும் இன்றி அணியலாம்.

மாறாக விருச்சிகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் – விருச்சிகம், மேஷம் ஆகிய இரண்டு ராசிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனால் இவர்கள் கருப்பு நிற ஆடை அணிவது நல்லதல்ல.

இதன் விளைவாக மனதில் குழப்பம் ஏற்படும். மற்றும் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருப்பு கயிற்றை அணிய முன்னர் செய்ய வேண்டியவை

1. கருப்பு கயிற்றில் நான்கு முடிச்சுகள் போட வேண்டும்.

2. முடிச்சிகளை ஒரு நல்ல நாள் பார்த்து செய்வது அவசியம். அதிலும் குறிப்பாக முடிச்சிகளை பிரம்ம முகூர்த்ததில் போடுவது நல்லது.

3. கயிற்றை கட்ட முன்னர் “ருத்ர காயத்ரி” மந்திரத்தை உச்சரித்து குல தெய்வத்தை நினைத்துக் கட்டவும்.

4. சனிக்கிழமை சனிக்குரியது என்பதால் இந்த நாட்களில் கருப்பு கயிறு அணியலாம்.

5. அணிந்த பின்னர் “ருத்ர காயத்ரி ” மந்திரத்தை உச்சரிப்பதால் கயிற்றின் வலிமை பெருகும் என ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர்.

முக்கிய குறிப்பு

கருப்பு கயிற்றை கட்டும் முன்னர் உங்கள் கையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறக் கயிறுகள் இருந்தால் கருப்பு நிற கயிற்றை அணிய வேண்டாம்.

மறக்காமல் இதையும் படியுங்க   இம்மாதத்தில் உருவாகும் முதல் குரு பெயர்ச்சி- ரிஷப ராசி முதல் அதிர்ஷ்டத்தை அள்ளும் மற்றைய ராசிகள்

Shares