ஜுன் மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகும் நிலையில், அதிர்ஷ்டத்தை பெற்று பணவரவை பெறும் ராசியைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின் படி கிரகங்களின் அஸ்தமனம், உதயம் இவை இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையில் சில பலன்களை அளிக்கின்றது.
அந்த வகையில் தேவர்களின் குருவான குரு வரும் ஜுன் மாத ஆரம்பத்தில் ரிஷப ராசியில் உதயமாகின்றார். இதனால் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், எந்த ராசியினர் பேரதிர்ஷ்டத்தை அடைகின்றனர் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் குரு உதயமாகும் நிலையில், திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவும், சம்பளம் தவிர பிற வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்ள் இலக்கை அடைவதற்கு கடின உழைப்பினால் பல மடங்கு வெற்றியை குவிப்பதுடன், தொழிலிலும் லாபம் ஏற்படும்.
கடகம்:
கடக ராசியினருக்கு குருவின் உதயம் சாதகமாக இருக்கும் நிலையில், ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் உதயமாகின்றது. இத்தருணத்தில் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைவதுடன், நம்பிக்கையையும் அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.