பொதுவாகவே இன்றும் பலரின் மத்தியில் பில்லி சூனியம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது. அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையிலும் கூட மனிதர்களால் துள்ளியமாக கணிக்க முடியாத எத்தனையோ விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றது.
இப்படிப்பட்ட விடயங்களுள் ஒன்று தான் சூனியம். பெரும்பாலும் சூனியத்தின் நல்ல பயன்பாட்டை விட தவறான பயன்பாடே அதிகமாகவுள்ளது. பொதுவாக தங்கள் எதிரிகளை வெல்ல சூனியத்தை பயன்படுத்துகின்றனர். சூனியம் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை சில அறிகுறிகளால் அறிய முடியும். அந்த வகையில் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் மற்றும் மனநல பிரச்சனைகள்
உடல் மற்றும் மனநல பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டால் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
நீண்ட நாட்களாக இருக்கும் உடல் சோர்வு, தூக்கமின்மை, காரணமே இல்லாமல் மனதில் பயம் ஏற்படுவது தீய சிந்தனைகள் அடிக்க தோன்றுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உரிய முறையில் தீர்வு பெற வேண்டியது அவசியம்.
துரதிர்ஷ்ட சூழ்நிலைகள்
உங்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தால் அல்லது எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் பிரச்சினைகளை அதிகமாக சந்திக்கின்றீர்கள் என்றால் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
கெட்ட எண்ணங்கள்
நீங்காத கவலைகள், விரக்தியான மனநிலை, உங்களை சுற்றி இருப்போர் உங்களை விட்டு விலகி செல்வதாகவும், நீங்கள் எப்போதுமே தனியாக இருப்பது போலவும் உணர்வு இருந்தாலும் அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் மனதில் எழுகின்றது என்றாலும் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதையே அவை உணர்த்துகின்றது.
சண்டை சச்சரவுகள்
நீங்கள் ஒரு பிரச்சினைக்கும் போகாத போது பிரச்சினைகள் மோதல்கள் அடிக்கடி உங்களை தேடி வருகின்றது என்றால் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். அவை பில்லி சூனியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே உணர்த்துகின்றது.
கெட்ட கனவுகள்
கெட்ட கனவுகளால் தூக்கமின்றி அவதிப்படுகின்றீர்கள் என்றாலும் கனவில் யாராவது துரத்துவது அல்லது தாக்ககுவது போன்ற கனவுகள் வந்தாலும் நீங்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் என அர்த்தம்.