ஜோதிடத்தை பொறுத்தளவில் ஒருவருடைய ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் பல நன்மைகளும் தீமைகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட குணாதிசயம் நிறைந்திருக்கும். ஆனால் இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போகும் 5 ராசிக்காரர்கள் மட்டும் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
அந்தவகையில் அந்த 5 ராசிக்காரர்கள் யார் யார் என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.
ரிஷபம்
சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசிக்கார பெண்கள் எப்போதும் அதிஷ்டமானவர்களாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் மகாலட்சுமியின் அருளை பெற்றவர்களாகவும் இருப்பார்கள். நிதி நிலைமையில் எப்போதும் மந்தமான நிலை இருக்காது.
கடகம்
சந்திர பகவான் ஆளக்கூடிய கடக ராசிக்கார பெண்கள் எப்போதும் கனிவானவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொருளாதார ரீதியாக எப்போதும் நல்ல நிலைமையில் இருப்பார்கள். பெற்றோர் மற்றும் கணவரால் சந்தோஷமாக வாழ்வார்கள்.
துலாம்
சுக்கிரன் ஆளக்கூடிய துலாம் ராசிக்கார பெண்கள் எப்போதும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். அதிஷ்டசாலியாக மட்டுமல்லாமல் வாழ்க்கையில் வெற்றியையும் பெறுவார்கள். தந்தைக்கும் கணவருக்கும் சமூகத்தில் நல்ல பெயரை வழங்குவார்கள்.
தனுசு
குரு பகவான் ஆளக்கூடிய தனுசு ராசிக்கார பெண்கள் எப்போதும் புண்ணியத்தை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் முற்பிறவியில் இருந்த குடும்பத்திலேயே மறுபிறவியிலும் பிறந்திருப்பார். வாழ்வில் வசதி, வாய்ப்பும், செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
மீனம்
குரு பகவான் ஆளக்கூடிய மீன ராசிக்கார பெண்கள் எப்போதும் தெய்வீக சக்தியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணமாகி செல்லும் குடும்பத்தில் அதிஷ்டத்தையும் சேர்த்துக்கொண்டு செல்வார்கள். சமூகத்தில் உயர்வான மரியாதை கிடைக்கும்.