உலகில் பல ஹோட்டல்களில் 13 இலக்க அறை இல்லாதது ஏன் தெரியுமா? காரணம் இதுதான்!

பொதுவாகவே உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக மேலைதேய நாடுகளில் 13 என்ற இலக்கத்தின் புலக்கம் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.

இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான மக்கள் இந்த என்னை ஒரு அச்சத்துடனேயே பார்க்கின்றார்கள்.

குறிப்பாக 13ம் திகதி வெள்ளிக்கிழமை என்றால் மேலைதேய நாடுகளில் பெரும்பாலான மக்கள் வெளியில் செல்வதை கூட தவிர்த்துவிடுகின்றார்கள்.

அது மட்டுமன்றி உலக புகழ் பெற்ற பல ஹோட்டல்களில் 13ஆம் எண்ணில் அறை அல்லது கட்டிடத்தில் 13வது மாடி பெயர் இல்லாமல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள் இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்னவென்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், 13 என்பது துர்திஷ்டம் நிறைந்த எண்ணாக பார்க்கப்பட என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?

இயேசுவின் கடைசி விருந்து (Last Supper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை 13 எனவும் யேசு மரித்த நாள் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை என்பதால் கிறிஸ்தவர்களின் மத்தியில் இந்த நாள் மிகவும் அசுபமான நாளாக நம்பப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 13 என்ற எண்ணின் மீது ஒரு வகையாக பய உணர்வு காணப்படுகின்றது. இது ஒரு வகையான ஃபோபியா என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ மொழியில் இந்த 13ஆம் எண்ணின் மீது காணப்படும் பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா என குறிப்பிடப்டுகின்றது.

உலகின் பல இடங்களில் அறை எண் 13 அல்லது 13 வது தளம் என்பதை எங்கும் காணவே முடியாதமைக்கு இதுதான் காரணமாகும்.

இவர்கள் 12 ஆம் அறைக்கு பின்னர் நேரடியாக 14 ஆவது இலக்கத்தை பயன்படுத்தும் வழக்கம் தான் காணப்படுகின்றது. தற்போது இந்தியாவிலும் சில இடங்களில் இந்த வழக்கம் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறக்காமல் இதையும் படியுங்க   இந்த திகதிகளில் பிறந்தவர்களை நம்பவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா?
Shares