ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் அளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர் மற்றவர்களின் உணர்ச்சிகளை விளையாட்டாக எடுத்துக்கொண்டு மற்றவர்களின் வாழ்வில் விளையாட கூடிய மனநிலை கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரட்டை குணம் உடையவர்களாகவும் மிகுந்த அறிவு கூர்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு எந்த விடயமும் எளிமையாக அலுத்து போய் விடும் இயல்புடையவர்களாக இருக்கின்றனர்.இதனால் மற்றவர்களின் உணர்வுகளையும் இவர்கள் விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர்.
சிம்மம்
சிம்ம ராசியினர் பிறப்பிலேயே தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மத்தியில் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.
விருச்சிகம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் கோபமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகள் குறித்து எப்போதும் அக்கறை செலுத்துவது கிடையாது. இருப்பினும் இவர்கள் நம்பிக்கையானவர்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கருணை சிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிகமாக கற்பனை உலகில் வாழும் தன்மை கொண்டவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் குணம் இருந்தாலும் அதனை அவர்கள் விரும்பி செய்வதில்லை.