இளம் வயதில் ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்க வேண்டுமா? கிரீன் டீயை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகு சார்ந்து பிரச்சினைகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றது. குறிப்பாக கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டி பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும். அதுமட்டுமின்றி இது பல சரும பிரச்சினைகளை சரி செய்ய உதவுகின்றது. அந்தவகையில் தற்போது கிரீன் டீயை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

இரண்டு தேக்கரண்டியளவு அரிசி மாவு, ஒரு தேக்கரண்டியளவு கிரீன் டீ தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து கலவையாக்கி அதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஆனால் கலவையைக் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி அப்ளை செய்யாதீர்கள். இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் அல்லது கலவை காயும் வரை வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

எலுமிச்சை சாறு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எலுமிச்சை சாறு முகப்பருவுக்குத் தீர்வளித்து முகத்தில் இருக்கும் வடுக்களைச் சரி செய்யவும் உதவுகிறது. உங்களுக்கு எலுமிச்சை சாறு கிடைக்க விட்டால் தேன் பயன்படுத்தலாம்.

அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளது. எண்ணெய் சருமத்திற்கு ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டராக அரிசி மாவு உதவும். மேலும் முகத்தில் இருக்கும் டனை அகற்றுவதற்கு அரிசி மாவு சிறந்த தீர்வாகும். அரிசி மாவு வைட்டமின் பி இன் மூலமாக இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.

Shares