பொதுவாக பெண்கள் தங்களின் முறையற்ற பராமரிப்பு காரணமாக அதிகமாக தலைமுடி பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனை செயற்கையான முறையில் தடுப்பதை விட இயற்கையான சில குறிப்புக்களை சரியாக பின்பற்றினால் நிரந்தர தீர்வை பெற முடியும்.
அந்த வகையில் வீட்டு சமையலறையில் முக்கிய பங்காற்றும் கறிவேப்பிலையுடன், சில மூலிகை சேர்த்து எண்ணெய் செய்து தடவினால் ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வு கட்டுபடுத்தப்படும்.
ஏனெனின் கறிவேப்பிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான கூந்தலை மேம்படுத்தவும் கூந்தலை வேகமாக வளர வைக்கவும் உதவியாக இருக்கின்றது.
அப்படியாயின் அந்த கறிவேப்பிலை எண்ணெய் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புதிய கறிவேப்பிலை – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 1 கப் ( வேறு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை
- முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து வெயிலில் காய விடவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு மிதமாக சூடேற்றவும்.
- சூடாகிய பின் கறிவேப்பிலையை கடாயில் போட்டு நன்றாக கிளறவும்.
- எண்ணெய் பச்சை நிறமாக மாறும் பின்னர் ஆற விட்டு போத்தல் ஒன்றில் ஊற்றி வைக்கவும்.
- தலைக்கு குளிக்கும் முன்னர் இந்த எண்ணெயை சேர்த்த தலையை நன்றாக மசாஜ் செய்து விட்டு ஷாம்போ போட்டு அலசவும்.
- இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் குறிப்பிட்ட நாளில் சிறந்த பலனை பார்க்கலாம்.