பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாகிய நிலையில் மகிழ்ச்சியில் கோபி துள்ளிக் குதித்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ஜெனிபர் மற்றும் செழியன் இருவரையும் பாக்கியா ஒன்று சேர்த்து வைத்துள்ளார். கோபியின் ஹொட்டலுக்கும் பாக்கியாவின் சமையல் சென்றுள்ளது.
இந்நிலையில் பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் ஞாபகமாகவே இருக்கின்றார். அவரது மருமகன் இனியாவை பின் தொடர்கின்றார்.
தற்போது யாரும் எதிர்பாராத வகையில் டுவிஸ்ட் நடந்துள்ளது. ஆம் ராதிகா கர்ப்பமாகியுள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். ராதிகா கூறிய குட்நியூஸால் கோபி துள்ளிக் குதித்துள்ளார்.