இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார்னு தெரியுமா?

நடிகர், நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் குழந்தை வயது புகைப்பங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மனிஷா கொய்ராலா தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை.

நடிகை மனிஷா கொய்ராலா

இவர் 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர் கூட்டத்தை அதிகரித்து கொண்டார். பிஸி நடிகையாக வலம் வந்த மனிஷா கொய்ராலா, சாம்ராட் என்பவரை 2010- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

அதன் பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுக்களிலேயே விவாகரத்து பெற்றார். தற்போது மனிஷா கொய்ராலா சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்க முன்பு மனிஷா கொய்ராலா மற்றும் பல முன்னணி நடிகைகளின் நடிப்பில் வெளியான ‘ஹீரா மண்டி’ வெப் தொடர் நெட்பிலிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திலையில் இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் லைரலாகி வருகின்றது.

மறக்காமல் இதையும் படியுங்க   இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா தனுஷ்? வெளியான புதிய தகவல்
Shares