யாழில் அதிகரித்து வரும் வழிப்பறிக் கொள்ளைச் சம்வங்கள்;சிசிரிவியில் பதிவான காட்சி

சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரைநகர்- யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.

வழிப்பறிக்கொள்ளை
கடந்த (02.11.2023) முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.

வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   ஈ.பி.டி.பியின் முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares