இன்றைய தினம் விலை குறைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் இன்று முதல் (02.11.2023) மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

Shares