இலங்கையில் இவ்வருடத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் 485 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஜானகி விதானபத்திரனவின் கருத்து
“இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரையான காலப்பகுதியில் 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்பட்டன.
இவர்களில் 80% ஆண்களே பதிவாகியுள்ளனர். எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடையிலானவர்கள் மத்தியிலேயே அதிகளவில் காணப்படுகிறது” என்றுத் தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் பொதுமக்களை அறிவூட்டும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டார்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).