இரத்தினபுரி – கிரியெல்ல பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (02) பகல் பஸ் ஒன்றின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி கவனக்குறைவாக வண்டியை செலுத்தியதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.