பிக்பாஸ் வீட்டில் காதலில் சிக்கிய ஐஷூ; கடும் கோபத்தில் பெற்றோர்!

பிக்பாஸ் வீட்டில் நிக்சன் வீசிய காதல் வலையில் சிக்கிய ஐஷூ மீது அவரது பெற்றோர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள 18 பேரில் ஐஷூவும் ஒருவர். இவர் ஊட்டியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஊட்டியில் புகழ்பெற்ற டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

காதல் கடுப்பேற்றும் விதமாக உள்ளதாக எதிர்ப்பு
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அசத்தி இருக்கின்றனர். இந்நிலையில் 7-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஐஷூ, முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார்.

அவரது விளையாட்டு முறை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. எனினும் போகப்போக நிக்சன் வீசிய காதல் வலையில் விழுந்த ஐஷூ, தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

முழுநேரமும் நிக்சன் உடனே இருப்பதும் அவருக்கும் உணவு ஊட்டி விடுவது என பிக்பாஸ் வீட்டில் லவ் பர்ட்ஸ் ஆகவே இருவரும் வலம் வருகின்றனர். சோசியல் மீடியாவிலேயே இவர்களது காதல் கடுப்பேற்றும் விதமாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், ஐஷூவின் வீட்டிலும் இதனை அவர்கள் பெற்றோர் எதிர்த்து வருவது தெரியவந்துள்ளது.

ஐஷூ பிக்பாஸுக்கு நுழைந்தது முதல் தன் மகளுக்காக ஐஷூவின் அம்மா ஷைஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆதரவு திரட்டி வந்தார். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஐஷூ குறித்து எந்த ஒரு பதிவையும் போடாமல் உள்ளார் ஷைஜி.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஐஷூவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் தான் அவர்கள் எந்தவித பதிவும் போடாமல் இருக்கிறார்களோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares