சட்டவி.ரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 42,000 இந்.தியர்கள்

அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோத நுழைவு தொடர்பாக பிரபல அமெரிக்க பத்திரிகை நிறுவன தரவுச் செய்தியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தரவுகளின்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

போலி முகவர்
இதில், பெரும்பாலானோர் புகலிடம் தேடி அமெரிக்காவுக்கு வருவதாகவும், சிலர் இதற்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து வேலை செய்து வருவோரின் தூண்டுதலின்பேரில் அதேபோன்று நுழைந்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லையைக் கடந்து நுழைய வெளிநாட்டுப் பயண முகவர்களும், போதைப்பொருள் கடத்துபவர்களும் குறிப்பிட்டத் தொகையை பெற்றுக்கொண்டு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

மேலும், 2023 அக்டோபர் மாதம் வரையில் சர்வதேச அளவில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக நுழைந்ததாக 2 மில்லியன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   கலியாணத்திற்காக கஞ்சாவிற்ற இளைஞர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *