முகேஷ் அம்பானிக்கு விடுக்கப்பட்ட கொ.லை மி.ர.ட்டல்: வெளியான தகவல்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை அச்சுறுத்தல் தொழிலதிபரும் ரிலையன்ஸ் நிறுவன தலைவருமான அம்பானிக்கு மின்னஞ்சல் மூலமாகவே விடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சுடும் வீரர்கள்
மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபர்கள் முகேஷ் அம்பானி தங்களுக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும் இந்தியாவிலேயே தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்களிடம் உள்ளனர் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல் குறித்து அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு அளித்துள்ளார்.

மும்பையில் உள்ள காம்தேவி பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares