முல்லைத்தீவில் அ.டித்துக் கொ.லை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) இரவு அ.டித்துக் கொ.லை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தாக்கப்பட்டதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த கைவேலி பகுதியை சேர்ந்த 71 வயதான தம்பிப்பிள்ளை மார்க்கண்டு என்பவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்திய நபர் கைது
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் கைவேலி – மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதான குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த கைக்கலப்பிற்கு காரணம் பழைய முரண்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   மன்னாரில் பாடசாலை மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய கணித ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *