மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவன் மீது அரசியல் செல்வாக்கான நபரொருவர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவன் மட்டக்களப்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (27.10.2023) மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் வகுப்பறைக்கற்றல் இடம்பெற்றவேளை வகுப்பாசிரியர் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையில் பிறதொரு மாணவனின் தந்தை வகுப்பறைக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.
குறித்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் சக மாணவரின் முதலுதவியில் மயக்கம் தெளிந்து வீடு சென்ற போது உடல் சோர்வு மற்றும் நோவு காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.
குறித்த மாணவன் 9ம் தரத்தில் கற்றுவருபவர் எனவும், தாக்குதலாளி மட்டக்களப்பில் நீதிமன்றில் பணிபுரியும் உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).