துபாயில் பிரபல குற்ற குழுவை சேர்ந்தவர் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை அச்சுறுத்தல்

துபாயில் பிரபல குற்ற குழுவை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல குற்ற குழுவான தகோன்னே கிரியா என்றழைக்கப்படும் குழுவை சேர்ந்த நபர் ஒருவரே நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் உத்தயோகத்தர் பாதாள உலகக்குழுவின் குற்ற செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்ட அச்சறுத்தல்
பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்துவிடுவதாக அந் நபர் தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபரின் தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   மாணவன் கொலை சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares