மேலும் ஒரு கட்டிடத்தில் பாரிய தீ வி.பத்து

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தீ வி.பத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் அத் தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தீயணைப்புப் பிரிவினர்
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ வி.பத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   வட்சப்பில் போலி தகவல் பகிர்வைத் தடுக்க புதிய அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *