வாகன விபத்தொன்றில் கான்ஸ்டபிள் ஒருவர் உயி.ரிழ.ப்பு

சியம்பலாண்டுவ – மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழுந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர்
சூரியவெவ காவற்துறையில் பணியாற்றும் 29 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 4 பேருடன் திருமண நிகழ்வுக்காக மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Shares