மாடு திருடுபவர்களுக்கு விதிக்கப்படும் 50,000 ரூபா அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதம் 50,000 ரூபா எனவும், அது போதாது என்பதால் உரிய அபராதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு வருடம் கடின உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை விதிப்பது தொடர்பாக விலங்குகள் நலச் சட்டத்தில் உட்பிரிவுகளைச் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.