யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விபத்து இன்றைய தினம் (24-10-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த விபத்து சம்பவம் நீர்வேலி, இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதான தனபாலசிங்கம் மகேஸ்வரி என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மறக்காமல் இதையும் படியுங்க  என்மேல கார் விட வந்தாங்க தப்பா நடந்துக்கிட்ட அந்த ஆளு கயிறுலதான் அப்பா முகம் தெரியும்
Shares