இலங்கையில் மனித கட.த்த.ல் வழக்கில் முக்கிய சந்தேக நபர் இந்தியாவில் கைது!
61 இலங்கை பிரஜைகளை 2021 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அழைத்து வந்த பின்னர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட மனித கடத்தல் மோசடியின் மன்னனை இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹாஜா நாஜர்பீடன் என்ற முகமது இம்ரான் கான் (39) என அடையாளம் காணப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது மறைவிடத்தை பெங்களூரில் இருந்து இந்திய தேசிய புலனாய்வு முகமையின் தலைமறைவு கண்காணிப்பு குழு கண்காணிந்து வந்ததுள்ளது.
அவரது நடமாட்டத்தை சில மாதங்களாக கண்காணித்து வந்ததாக இந்திய தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சந்தேக நபரான முகமது இம்ரான் கான் ஒரு கடத்தல்காரர் மற்றும் பல புலனாய்வு அமைப்புகளால் தேடப்படும் வரும் குற்றவாளி என்று இந்திய தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது.
“அவர், முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஈசன் என்ற இலங்கைப் பிரஜையுடன் சேர்ந்து, 61 இலங்கை பிரஜைகளை தீவு நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல ஒரு திட்டத்தை வகுத்துள்ளார்.
கனடாவுக்கு குடிபெயர்வதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெறுவது மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவது உள்ளிட்ட தவறான வாக்குறுதிகள் மூலம் அவர்கள் இந்த நபர்களை ஏமாற்றியதாக என்று இந்திய தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது.
2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு மதுரையில் 23 இலங்கைப் பிரஜைகளையும் 4 முகவர்களையும் மீட்டு வழக்குப் பதிவு செய்தது, இதேவேளை மங்களூருவில் மேலும் 38 இலங்கைப் பிரஜைகளை தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இதுவரை 13 சந்தேக நபர்களை இந்திய தேசிய புலனாய்வு முகமை கைது செய்து, தினகரன் என்கிற அய்யா, காசி விஸ்வநாதன், ரசூல், சத்தம் உஷேன், அப்துல் முஹீது ஆகிய 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
“சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த சதித்திட்டத்தில் இம்ரான் கான் முக்கிய பங்கு வகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கைப் பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கும், பின்னர் மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு தீவிரமாக செயல்பட்டுள்ளனர் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.