காரில் வந்த குழு ஒன்றினால் கட.த்தப்பட்ட பெண்

கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை காரில் வந்த குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்பிட்டி பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று அதிகாலை பெண் கடத்தப்பட்ட காரை ஆனமடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கார் பாலாவிய – முந்தலம் ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கல்பிட்டி பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்க பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு
அதனைத் தடுக்குமாறு கல்பிட்டி பொலிஸார் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.

காரை ஆனமடுவ பொலிஸார் மீட்டுள்ளதோடு காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில் காரை ஓட்டிய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை ஆனமடுவ வதத்த பிரதேசத்தில் அக் காரின் வேகம் குறைந்த போது கடத்தப்பட்ட வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காரில் இருந்து தப்பிய அப் பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடித்து ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப் பெண் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் கைது செய்யப்பட்ட நபரையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Shares