பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

குருநாகல் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடிய இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது, குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளம் பெண் குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடி மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   தமிழர் பகுதியில் கோரவிபத்து; பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares