இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடலை அடையாளம் காண அதிரடி நடவடிக்கை!
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்க என்ற பெண்ணின் சடலத்தை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது இரு பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரியின் டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளை இஸ்ரேலுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார் என்பது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.