இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் நுளம்புகள்!

தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நுளம்பு இனம் மீரிகம, ஹந்துருமுல்ல பிரதேசத்தில் காணப்படுவதாக பூச்சியியல் திணைக்களத்தின் பூச்சியியல் அதிகாரி திரு.கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நுளம்பு இனங்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Shares