களுத்துறை மஹா பள்ளிய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் சுமார் 05 அடி 06 அங்குல உயரம் கொண்ட மெலிந்த உடல் அமைப்பை கொண்ட ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் நீண்ட கை சட்டையும், சாம்பல் நிற சாரம் ஒன்றை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.