தமிழர் பகுதியில் பரிதாபமாக உயி.ரிழ.ந்த அரச உத்தியோகஸ்தர்

மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோத்தர்
இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளதோடு இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தாய் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 வயதான இவரின் தந்தை முழுமையாக செயல்பட முடியாதவர் என்பதோடு இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

மறக்காமல் இதையும் படியுங்க   47 வருடங்களுக்கு பிறகு அரசியலிலிருந்து ரணில் ஓய்வு ; சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் ஐதேக
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares