பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய தனியார் நிறுவன தம்பதிகள்; வெளியான காணொளி

கந்தானையில் தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளரும் அவரது மனைவியும் பெண் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் அக் காணொளியில் இருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணை
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று இரவு கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிப்டன் வீதி நாகொட பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தானை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க  50 வயது முரட்டு சிங்ளை இரண்டாவதாக திருமணம் செய்த மலையாள நடிகை திவ்யா… அதிர்ச்சியில் உரைந்த ரசிகர்கள்..!!
Shares