13 வயது மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற தாய்

காலியில் தாய் ஒருவர் தனது மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

காலி, பலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய மகனுக்கு எதிராகவே தாயார் பொலிஸ் நிலையம் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயாரின் முறைப்பாடு
இணையம் ஊடாக கையடக்கத் தொலைபேசியில் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது மகனை மீட்டு தருமாறு தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

தாயாரின் முறைப்பாட்டிற்கமைய வெள்ளிக்கிழமை மாலை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் மகன் முன்னிலைபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை பிள்ளையின் பாதுகாப்பை தந்தையிடமே வழங்குமாறு பலப்பிட்டிய பதில் நீதவான் லூஷன் வடுதாந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Shares