அபிவிருத்தி எனும் நோக்கில் அழிக்கப்பட்டு வரலாறு பொக்கிஷங்கள்!

இலங்கையின் வரலாற்று புகழ் மிகு தேசத்து ஆலயம் பொத்துவில் சங்கமன் கண்டி காட்டு பிள்ளையார் ஆலயம் ஆனது பழம் பெரும் தொன்மை வாய்ந்த ஆலயமாக 1885ம் ஆண்டு உருவாக்கம் பெற்றதாக வரலாறுகள் மூலமாக எம்மால் அறிய முடிகிறது.

இதற்கு பின்னால் காணப்படும் வனப்பகுதியில் சங்குமன் இளவரசன் வாழ்ந்த சான்றுகள் புதையுண்டு கிடக்கின்றன.

இவ்வாறு வரலாற்று தொன்மை வாய்ந்த சங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயத்தின் புனர் நிர்மாண பணிகள் தற்போது இடம் பெற்று வருவதாக முகநூல் வாயிலாக அறிந்தேன்.

முகத்தை விற்று முகமூடி வாங்கி அணியும் சமூகமாக போகிறது நம் சமூகம்.

நாம் தமிழர்கள் எமக்கு என்று இந்த மண்ணில் வரலாறு உள்ளது என்று சொல்லும் அளவில் வீரம் பேச எம் மூதாயர்கள் எமக்கு செய்த வரலாற்று பொக்கிஷங்கள் என்றே கூறலாம்.

அவ்வாறான பொக்கிஷங்களில் ஒன்றை அபிவிருத்தி எனும் நோக்கில் உடைத்து அழித்தல் என்பது ஏற்க முடியாத ஒன்றாகும்.

இந்த ஆலயத்தை உடைக்காமலே பாதுகாத்து வந்திருக்கலாம். சுற்று சூழல்களைமாத்திரம் அழகு படுத்தி பாதுகாத்திருக்கலாம். என மட்டக்களப்பில் வசித்து வரும் கோபாலபிள்ளை ஜெய பிரகாசம் இந்த முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   ஈ.பி.டி.பியின் முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares