தமிழர் பகுதியில் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாண பகுதியொன்றில் வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 7ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டிலிருந்து குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது.

இதையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் (12-10-2023) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 37 வயதான பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Shares