இஸ்ரேலுக்கு சென்ற கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா மதுவந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் சுஜித் நிஷங்க பண்டார யாதவர என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஜித் பண்டார யாதவரவுக்கு 13 வயது மகளும் 8 வயது மகனும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கல்வியை முடித்துவிட்டு பல தொழில்களை செய்தவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பணியாற்ற சென்றுள்ளார்.

அங்கு பணிபுரியும் போது வென்னப்புவையில் வசிக்கும் ஜெயனா மதுவந்தி என்பவரை சந்தித்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப நெருக்கடி காரணமாக 2015ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு வந்து சுமார் ஒரு மாதம் தங்கியிருந்த அவர் இஸ்ரேலுக்குத் திரும்பியதாக தெரிய வந்துள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   குச்சவெளியில் பிக்கு அட்டகாசம்; புதிய ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares