jaffna7news

no 1 tamil news site

NewsSri lanka News

யாழில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – பெண்கள் கும்பல் அட்டகாசம்

சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து 10 இலட்சம் பெருமதியான பொருட்களை அபகரித்த சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக இளைஞனை மறவன்புலவுக்கு வரவைத்து இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த நாலரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அபகரித்து சென்றுள்ளனர்.

அதன்பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களும், குறித்த நகைகளை கொள்வனவு செய்து அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக்கிய கடை உரிமையாளர் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் 6 பேரையும் ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமயில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares