jaffna7news

no 1 tamil news site

NewsSri lanka News

குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய மதுபான போத்தல் தொடர்பில் விசாரணை

குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய மதுபான போத்தல் தொடர்பில் விசாரணை

மக்களால் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய மதுபான போத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அரசாங்க கணக்கு குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

விசாரணை
அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு செறிவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உற்பத்தி செய்வது தொடர்பான பிரேரணையை முன்வைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3000 ரூபா நாளாந்த சம்பளத்திற்கு பணிபுரிபவர் மதுவை பெற 800 ரூபாவை செலவிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மதுபானத்தின் விலை அதிகரிப்பால் சட்டவிரோத மதுபான விற்பனை வேகமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சுகாதார சீர்கேடும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares