தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாயுடன் பயணித்த சிறுமி
சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கற்கும் தலாவ கரகாட்டவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதான டபிள்யூ, நிசல்யா நெத்சரணி விமலசேன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தனது தாயுடன் பயணித்த சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் தாங்கியில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாகவும், இதன் போது சிறுமி வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த விபத்தில் குறித்த சிறுமியின் தாய்க்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.