மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைப்புடன் கூடிய பாடசாலைத் தோட்ட கண்காட்சி.!கல்வி அமைச்சர் பங்கேற்பு…!

தொழில் முனைப்புடன் கூடிய பாடசாலைத் தோட்ட கண்காட்சி முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்ஸின் ஆலோசனையின் பேரில் மாகாண விவசாய திணைக்களத்தினரால் தொழில் முயற்சியுடன் கூடிய இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து விருந்தினர்கள் பாடசாலையில் கண்காட்சியினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்ததோடு அங்கு வீட்டு தோட்டத்தினையும் பார்வையிட்டனர்.

குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கான தலா ரூபாய் 150000.00 வவுச்சர்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

இன்றைய ஆரம்ப நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் ,கல்வி வலய அதிகாரிகள் ,விவசாய திணைக்கள அதிகாரிகள் , சுகாதார துறை அதிகாரிகள்,பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மறக்காமல் இதையும் படியுங்க   மாணவன் கொலை சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares