யாழில் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு

யாழில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் தென்மராட்சி கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இன்று (10.10.2023) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உதவித்திட்டம்
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை வழங்கினார்.

மேலும் நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கடற்றொழிலாளர்களுக்கு தலா 150 லீற்றர் என்ற அடிப்படையில் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறக்காமல் இதையும் படியுங்க   மாணவன் கொலை சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares