வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் எடுக்கப்பட்ட தீர்மானம்!

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது.

தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கட்சிகள் கதவடைப்பு போராட்டம்
உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிக இதில் கல்லந்துகொண்டிருந்தனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   குச்சவெளியில் பிக்கு அட்டகாசம்; புதிய ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares