வவுனியாவில் காணாமல் போயுள்ள நான்கு பிள்ளைகளின் தந்தை

வவுனியா – சிதம்பரம் பிரிவுக்குட்பட்ட முருகனூர் கிராமத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த (04.10.2023) அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனையடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்டன் ஜொன்சன் என்ற குறித்த நபர் வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்திருந்தார்.

எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு சம்மந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   Today Gold Price: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares