முல்லைத்தீவில் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றையதினம் (08.10.2023) கைதாகியுள்ளார்.
முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் சிக்கியுள்ளார்.
20 வயது இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட குறித்த நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து 486 காெக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.