இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்

வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (09.10.2023) முதல் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் மீதான இறக்குமதி தடைகள்
கோவிட் தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இலங்கை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும், பயணிகள் வாகனங்கள் மீதான இறக்குமதித் தடைகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   Today Gold Price: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares