வீட்டுக்கு முதன்முதலாக வந்த மரு மகள்.. ஆரத்தி எடுக்கும்போது மாமியார் செஞ்ச வேலையைப் பாருங்க… முதல் நாளே இப்படியா..!

மாமியார், மருமகள் ஒற்றுமை என்பது இப்போதெல்லாம் பல வீடுகளிலும் இல்லாமலே போய்விட்டது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாமியாரும், மருமகள்களும் வீட்டில் இருக்கும் ஆண்களின் நிம்மதியையும் சேர்த்தே கெடுத்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் வீடே கொண்டாட்டம் ஆகிவிடும் அல்லவா

என்னதான் மருமகளோடு சண்டையே போடக் கூடாது என மாமியாரும், மாமியாரோடு சண்டையே போடக் கூடாது என மருமகளும் சத்தியம் செய்துவிட்டு வாழ்ந்தாலும் இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சினை எட்டிப் பார்த்துவிடுகிறது. இங்கேயும் அப்படித்தான் தன் மகனுக்கு திருமணம் முடிந்த கையோடு முதன் முதலாக மருமகள் தன் வீட்டிற்கு வருகிறார். அவரை வரவேற்க மாமியாரும் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தார்.

அதிலும் தன் மருமகளை வாசலில் நிறுத்தி மாமியார், திருஷ்டி சுற்றுகிறார். அப்படி சுற்றிவிட்டு தேங்காயை உடைக்க வேண்டிய நேரம் வருகிறது. அந்த நேரத்தில் மாமியார் தேங்காயை தரையை நோக்கி எறிவதற்குப் பதிலாக தன் மருமகளின் தலையிலேயே தவறுதலாகப் போட்டுவிட்டார். என்னடா இது வீட்டுக்குள் வந்து சேர்ந்து வாழ்ந்த பின்பு, நடக்கும் சண்டையை இப்பவே தொடங்கிவிட்டீர்கள் என நெட்டிசன்கள் இதைக் கலாய்த்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

Shares