யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி பகுதியை சேரந்த இளைஞர் வாள் ஒன்றை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸார் இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்து வாள் மீட்கப்பட்டதை அடுத்து, 28 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.